Live Chennai
Live Chennai

கணவருடன் கருத்து வேறுபாடு – செளந்தர்யா ரஜினிகாந்த்!

soundarya-rajinikanth-wedding-reception-movie-event-latest-photos0871தான் விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான செய்தி உண்மைதான் என செளந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் கடந்த சில தினங்களாக செய்தி வெளியாகின. அதனை தற்போது செளந்தர்யா ரஜினிகாந்த் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள செளந்தர்யா ரஜினிகாந்த், தனது திருமண வாழ்வு குறித்து வெளியான செய்தி உண்மைதான் என்று கூறியுள்ளார். தாங்கள் இருவரும் கடந்த ஓராண்டிற்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது சொந்த வாழ்க்கை குறித்த விவாதங்களை தவிர்க்குமாறும் செளந்தர்யா ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

English Summary: Disagreement with her husband – Soundarya Rajinikanth Divorced!


comment closed