இந்திய ரயில்வே அறிவித்த புதிய ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 215 கி.மீ.க்கு மேல் சாதாரண வகுப்பில் பயணிப்பவர்களுக்கு கிலோ மீட்டருக்கு 1 பைசாவும், எக்ஸ்பிரஸ் மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட ரயில்களில் பயணிப்பவர்களுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசாவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
