திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கமண்டல நதியின் குறுக்கே செண்பகத்தோப்பு அணை அமைந்திருக்கிறது. இந்த அணையை சீரமைக்கக் 34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.

அணை பகுதியில் செட்டர் அமைப்பதற்காக துளையிடும் தேடும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் செண்பகத்தோப்பு அணை சீரமைக்கும் பணிகளை கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மதகுகள் சீரமைக்கப்பட்ட பிறகு போளூர், ஆரணி, செய்யாறு , வந்தவாசி ஆகிய வட்டங்களில் 7,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *