தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் இன்று முதல் தபால் வாக்குகளை பதிவு செய்யலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

சென்னை வாக்குசாவடிகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் தி.நகர் தொகுதிக்கு உட்பட்ட கோடம்பாக்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன், வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்கள் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை தங்களின் வாக்குகளை தபால் ஓட்டுகளாக பதிவு செய்யலாம் என்று தெரிவித்தார்.

சென்னையில் மட்டும் தேர்தல் பணிகளுக்காக 20 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்களும், 16 ஆயிரம் காவலர்களும் பணியாற்ற உள்ளதாகவும் சந்திரமோகன் தெரிவித்தார். பதற்றமான வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றவழக்குகளில் தொடர்படையவர்கள் அனைவரும் கண்காணிக்கப்படுவார்கள் என்றும், ஏற்கனவே உள்ள 48 பறக்கும் படை அதிகாரிகளோடு கூடுதலாக 16 அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் சந்திரமோகன் தெரிவித்தார்.

English Summary : Registration for postal voting starts today. Election Officer Chandra Mohan informed.