நாம் அனைவரும் முகநூல் மற்றும் WhatsApp ல் கருத்துக்கள் பரிமாறுகிறோம், வரும் பதிவுகளை மற்றவருக்கு அனுப்பி வைக்கிறோம்.

இங்கு கலசப்பாக்கத்தின் சட்டமன்ற உறுப்பினர் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், தனக்கென இணையத்தளம் மற்றும் முகநூல் பக்கங்களை ஆரம்பித்து மக்கள் பணி ஆற்றி வருகிறார்.

கலசப்பாக்கம் தொகுதி வளர்கிறது ! பங்காற்றுவோம், பயன் பெறுவோம் – என்ற வரிகளுடன் தினம் தினம் தன் எண்ணங்களை தன் தொகுதி மக்களுக்கு பகிர்ந்து வருகிறார்.

ஒன்றாய் செய்வோம்!
நன்றாய் செய்வோம்!
ஒவ்வொன்றாய் செய்வோம்!

என்ற கருத்துக்களுடன், மக்களின் கருத்துக்களை தெரிந்து மின்னல் வேகத்தில் பணியாற்றி வருகிறார்.

www.vpanneerselvam.com என்ற இணையத்தளம் 13 நவம்பர் 2019 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களால் தொடங்கப்பட்டது. இந்த 10 நாட்களில் உச்ச வரம்பான 5000 பேர் இவரின் முகநூல் பக்கத்தில் இணைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *