தண்டவாளப் பராமரிப்பு: ரயில் போக்குவரத்து மாற்றம் 3 நாள்களுக்கு

பள்ளிக்குப்பத்தில் தண்டவாள பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சித்தூர் தென்மத்திய ரயில்வே முதுநிலை பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலூர் மாவட்டம், பள்ளிக்குப்பம் ரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்புப் பணி (எல்.சி. எண்.59) நடைபெற உள்ளது.

இதனால், சனிக்கிழமை காலை 7 மணி முதல் திங்கள்கிழமை மாலை 5 மணி வரை அந்த தண்டவாளத்தில் ரயில் போக்குவரத்து மாற்றிவிடப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *