வணக்கம்..

“படைப்பு பயனுற வேண்டும்” என்ற எழுத்தாளர்களுக்கான கருத்தரங்கிற்கு உங்களை வரவேற்கிறோம்…

நாள்: 23, நவம்பர் – 2019 (சனிக்கிழமை)

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம்: அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை.

இக்கருத்தரங்கின் நோக்கம் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை புத்தகங்களாக உருவாக்குவதற்கும் அப்படி உருவாக்கப்பட்ட புத்தகத்தை அதற்குரிய வாசகர்களிடம் செவ்வனே கொண்டு செல்வதற்கும் உதவுவது ஆகும்.

கருத்தரங்கின் தலைப்புகள்…:

படைப்புகளை புத்தக வடிவில் கொண்டு வருவது எப்படி?

புத்தகத்தை வெளியிட தகுந்த பதிப்பாளரை அடையாளம் காணுவது எப்படி? அல்லது தாங்களே வெளியிடுவது எப்படி?

புத்தகத்தை சந்தைப்படுத்துவது எப்படி? இணையவழி புத்தகக் கடைகள் மற்றும் மின்-புத்தகங்கள் குறித்த தகவல்களைப் பெறுவது எப்படி?

எழுத்தாளர் தனக்கென்று ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கிக் கொள்வது எப்படி? எப்பொழுது அதனை தொடங்கவேண்டும், எப்படி அதனைக் கொண்டு செல்ல வேண்டும்?

புத்தகத்தை வெளியிட்டு அதனை சந்தைப்படுத்துதலில் இன்றைக்குள்ள சவால்கள் என்னென்ன? அவற்றை எதிர்கொள்ள பதிப்பாளர்களுடன் எப்படி இணைந்து செயலாற்றுவது?

புத்தகம் வாங்குவோரிடம் சமூக வலைத்தளங்கள் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன? அதனை எப்படி தக்கவாறு பயன்படுத்திக்கொண்டு புத்தக விற்பனையை அதிகரிப்பது?

தன்னுடைய படைப்புக்கான காப்புரிமையை எப்படி பாதுகாத்துக் கொள்வது?

தனது படைப்பை எப்படி பிற மொழிகளுக்கு மொழிபெயர்ப்புச் செய்வது? அதற்கான காப்புரிமை விதிகள் என்னென்ன?.

இந்நிகழ்வில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.

விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.

நன்றி.
அன்புடன்,

கோ. ஒளிவண்ணன்
98400 37051

படைப்பு பயனுற கருத்தரங்கில் கலந்துகொள்ள பதிவு படிவத்தை இத்துடன் அனுப்பியுள்ளோம்.

இதனை நீங்கள் இணையவழியாக (ஆன்லைனிலேயே) பதிவு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *