மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களை 25.6.2021 அன்று தலைமைச்செயலகத்தில் BVK தொழில் குழுமத்தின் தலைவர் திரு கே. வி.பாலா அவர்கள் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் உடன் நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு கே.கே கோவிந்த மூர்த்தி, முதுநிலை மேலாளர் திரு. வெங்கடேசன் ஆகியோர் உள்ளனர்.

மேலும் அவர்கள் அளித்த அறிக்கையில் கூறியதாவது :

மாண்புமிகு தமிழக முதல்வர் திருமிகு. மு.க.ஸ்டாலின் அவர்கட்கு,

கடந்த சட்ட மன்ற தேர்தலிலே, ஆகப்பெரும் வெற்றியை அடைந்து, நம் தாய்த் தமிழகத்தின் முதல்வராக தாங்கள் அரியணை ஏறியமை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். வாழ்த்தி வணங்குகிறோம்.

தங்கள் சீர்மிகு தலைமையிலே தமிழகம் தொழில் துறையிலும், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிலும் தன்னிகரிலா வளர்ச்சி கண்டு, தரணியிலே தலைநிமிரும் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை.

EU இந்தியன் சேம்பர்ஸ், பன்னாட்டு மனித உரிமைகள் பாதுகாப்பு குழுமம், சௌராஷ்ட்ரா வணிக மேம்பாட்டு குழுமம், BVK தொழில் குழுமம் மற்றும் எங்களது மரபு சாரா எரிசக்தி, விவசாயம், நிதித்துறை முதலீட்டு நிறுவனங்களில், தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் எங்கள் தொழிலாளர்கள் சார்பில், தாங்கள் தங்கள் அனைத்து முனைவுகளிலும், முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம். தாங்கள் அமைத்துத்தரும் நல்ல பாதையிலே நாங்கள் தங்களுடன் பயணிப்போம் என்பதனையும் உறுதிபட தெரிவித்து கொள்கிறோம்.

ஒரு தொழில் முனைவோனாக, கோவிட் – 19 பெருந்தொற்றினால், நம் நாட்டு மக்கள், குறிப்பாக நம் தமிழக மக்கள், அடைகின்ற துயர்குறித்து தாங்கள் அடைகின்ற வருத்தங்களையும், சோகங்களையும் பகிந்துகொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

தங்கள் சீர்மிகு தலைமையின் கீழ் தாங்கள் திறம்பட நடத்திச் செல்லும் தமிழக அரசு எடுக்கும் முனைப்புகளும், முயற்சிகளும் இந்த கோவிட் – 19 பெருந்தொற்று என்னும் காரிருளை கிழித்துக்கொண்டு கிளம்பிய ஒளிக்கதிராக எங்களுக்கு நம்பிக்கை ஊட்டுகின்றது. தங்களின் கருணை மிகு வழிகாட்டுதலின் கீழ், ஒன்றிணைந்து நாம் இந்த துயரினை, சோதனையினை வென்று வாகை சூடுவோம் என்பதில் ஐயமேதுமில்லை.

இந்த சோதனைமிகு வேளைதனிலே, எங்கள் ஒத்துழைப்பினை தங்கட்கு நல்கும் முகத்தான் தமிழ்நாடு அரசு – முதல்வர் பொது நிவாரண நிதிக்கு எங்களின் பங்களிப்பாக ரூபாய் இருபத்தைந்து இலட்சத்திற்கான (ரூ. 25,00,000 /- ) காசோலையை இந்த மடலுடன் இணைத்து தாழ்மையுடன் சமர்ப்பிக்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *