சென்னையில் கடந்த ஆண்டு கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு பொதுமக்களின் நல்லாதரவுடன் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அடுத்தகட்டமாக கோயம்பேடு முதல் ஷெனாய் நகர் வரையிலான மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் மின் இணைப்புகள் கொடுக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இதில் திருமங்கலம் மற்றும் ஷெனாய் நகருக்கும் இடையேயான பணி வரும் ஏப்ரல் மாதம் முற்றிலும் நிறைவு பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் வரும் மே மாதம் திருமங்கலத்தில் இருந்து ஷெனாய் நகர் இடையேயான சோதனை ஓட்டம் நடத்தப்படும். இந்த வழித்தடம் சுரங்க பாதையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்
ஷெனாய் நகர் – நேரு பூங்கா இடையேயான பாதையில் தண்டவாளம் அமைக்கும் பணியும் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது.
அதுமட்டுமின்றி வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளன. வண்ணாரப்பேட்டை முதல் கொருக்குப்பேட்டை வரை 2.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கவும் அதனுள் ரெயில் நிலைய கட்டுமான பணிக்கும் டாட்டா நிறுவனமும் அப்சான் நிறுவனமும் டெண்டர் போட்டுள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களில் ஏதாவது ஒரு நிறுவனத்துக்கு இதற்கான ஒப்பந்தம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English summary-Metro Rail trial run between Thirumangalam –Shenoy Nagar to take place in MayMetro Rail trial run between Thirumangalam –Shenoy Nagar to take place in May