சென்னையின் முக்கியமான போக்குவரத்து மையங்களில் ஒன்றான பிராட்வே பேருந்து நிலையம் வரும் 7ம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) அறிவித்துள்ளது. இதன் காரணமாக, பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த மாநகர பேருந்துகள் இனி ராயபுரம் மற்றும் தீவுத்திடல் பகுதிகளில் இருந்து இயக்கப்படும் என்றும், பயணிகள் இந்த மாற்றத்தை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிட வேண்டும் என்றும் எம்டிசி தெரிவித்துள்ளது. பேருந்து சேவைகள் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும் என்றும், பயணிகளின் வசதிக்காக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *