மும்பை: பரோடா வங்கி, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி இணைப்பை எதிர்த்து வரும் 26 ஆம் தேதி அன்று வேலை நிறுத்தத்துக்கு வங்கிகள் தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

குஜராத்தை தலைமையிடமாக கொண்டு பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. அதே போல் விஜயா வங்கி பெங்களூருவையும் தேனா வங்கி மும்பையையும் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த மூன்று தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை இணைத்து ஒரே வங்கியாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குஜராத்தி தலமையகமாக கொண்டு அமைக்கப்பட உள்ள இந்த வங்கி நட்டின் மூன்றாவது பெரிய வங்கியாக இருக்கும் என அரசு தெரிவித்தது.

இந்த இணைப்பை வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கடுமையாக எதிர்த்து வருகிறது. அந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் கூட்டத்தில் இதை எதிர்த்து தீர்மானம் நிறவேற்றப்பட்டுள்ளது. நேற்று மும்பையில் வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் கூடி இது குறித்து ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரும் 26 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாசலம், ‘மத்திய அரசும் வங்கிகள் நிர்வாகமும் இந்த மூன்று வங்கிகள் இணைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஆகவே அதை எதிர்த்து நாங்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளோம்.

வரும் 26 ஆம் தேதி நடைபெறும் இந்த வேலை நிறுத்தப் போரட்டத்தில் வங்கிகளின் 9 தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளன. அத்துடன் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை எதிர்த்து வரும் ஜனவரி 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் அனைத்து இந்திய வங்க் ஊழியர் சங்கம் கலந்துக் கொள்ளும்’ என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *