இந்தியாவில் மக்கள் வாழ்வதற்கு, ஏற்ற தகுதியான நரகங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் புனே முதலிடத்தையும், சென்னை 14வது இடத்தையும் பிடித்துள்ளது. தலைநகர் டில்லி 65 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த தகவலை இந்திய, வீட்டு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் (ministry of housing and urban affairs (MoHUA)) வெளியிட்டு உள்ளது.

நாடு முழுவதும், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் கல்வி, சுகாதாரம், பொருளா தாரம் மற்றும் தேவைப்பாடுகள் குறித்து, மக்கள் வாழத் தகுதியா நரகங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது.

எளிதாக வாழத்தகுதியான முதல் 10 நரங்களில் புனே முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனால் தலைநகர் டில்லி, கொல்கத்தா, சென்னை போன்ற நகரங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளன.

இந்திய வீட்டு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், முதலிடத்தில் புனே உள்ளது. அதைத்தொடர்ந்து, நவி மும்பை மற்றும் கிரேட்டர் மும்பை, திருப்பதி மற்றும் சண்டிகர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

தலைநகர் டில்லி 65 வது இடத்திலும், சென்னை 14 வது இடத்திலும் உள்ளது. ஆனால் இந்த லிஸ்டில் கொல்கத்தா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1. புனே
2. நவி மும்பை
3. கிரேட்டர் மும்பை
4. திருப்தி
5. சண்டிகர்
6. தானே
7. ராய்பூர்
8. இந்தோர்
9. விஜயவாடா
10. போபால்

இந்த பட்டியலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்கு நகரங்களும், ஆந்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் இரண்டு நகரங்களும், அரியான மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த தலா ஒரு, நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் இருந்து ஒரு நகரம் கூட முதல் பத்து இடத்தை பிடிக்கவில்லை. இந்த பட்டியலில், திருச்சியும் 12வது இடத்தையும், சென்னை 14வது இடத்தையும் பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *