தமிழ் தொலைக்காட்சி நேயர்களுக்கு ஒரு பெரிய எண்டெர்டைன்மெண்ட் இந்த வருஷம் காத்திருக்கு. ஒரு பக்கம் பிக் பாஸ், இன்னொரு பக்கம் மாஸ்டர் செஃப். இதை எல்லாம் தூக்கி சாப்பிடற மாதிரி வரப்போகுது “சர்வைவர்”(Survivor).
இதுவும் ஒரு சர்வதேச கான்செப்ட்தான். இப்போது ஜீ தமிழ் சேனல் தமிழ் தொலைக்காட்சியில் முதல் முறையாக தமிழில் இதை அறிமுகப்படுத்துகிறது. இதில் என்ன ஸ்பெஷல் என கேட்குறவங்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு தனி தீவில் எந்த ஒரு செட் இல்லாமல் இருப்பதால் போட்டியாளர்களின் செயல்கள் நம்பகத்தன்மையுடன் இதில் இருக்கும், நாம் இதுவரை கண்டிருந்த பிக் பாஸ் போன்ற செட்டில் நடக்கும் ரியாலிட்டி ஷோவிற்கு நடுவே இது உண்மையிலே கண்ணுக்கு விருந்து படைக்கும் என்பதில் ஐயமில்லை.
15 முதல் 20 போட்டியாளர்கள் மூன்று மாத காலம் இந்தியாவிற்கு வெளியில் உள்ள ஒரு தனித்தீவில் தங்கி, உணவு, தங்குமிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் போட்டியாளர்கள் அவர்களாகவே உருவாக்கிக்கொள்ள வேண்டும். போட்டியாளர்களுக்கு எந்தவிதமான வசதி வாய்ப்புகளும் உருவாக்கித் தரப்பட மாட்டாது. அதே நேரம் நிகழ்ச்சியில் சவால்கள் நிறைய உண்டு. சவால்களை எதிர்கொண்டு, எலிமினேட் ஆகாமல் கடைசி வரை இருக்கும் ஒருவரே டைட்டில் வின்னராக அறிவிக்கப்படவிருக்கிறார்.
ஜீ தமிழ் இந்த நிகழ்ச்சி மிகவும் பிராமாண்டமாய் நடத்தவிருக்கிறது, இதற்கென போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையை சேனல் சார்பில் துவங்கிவிட்டதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் இந்த நிகழ்ச்சி அனைத்து வயதினருக்கும் ஏற்றவாறு மனித உணர்வுகளை தொடுவதாக இருக்கும் என்று நம்பபடுகிறது. இதற்கெனவே இந்த பிரமாண்டமான ‘சர்வைவர்’ நிகழ்ச்சியின் ஆங்கர் யார், என்ற எதிர்பார்ப்பும் துவங்கியுள்ளது ? இப்போதைக்கு மூன்று பேர் ரேஸில் இருக்கிறார்கள்- சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன். இவர்களில் சிம்பு முந்தி ஓடிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.