தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழா, பிப்., 5ம் தேதி நடைபெறுகிறது என, மாவட்ட நிர்வாகம், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த, 1980- ஏப்., 3ம் தேதியும், 1997 ஜூன், 9ம் தேதியும், தஞ்சாவூர் பெரியகோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 23 ஆண்டுக்கு பின், குடமுழுக்கு விழாவிற்க்கான திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம், கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் பெரியகோவில் கூட முழக்கிற்க்கான ஆய்வு மேற்கொண்டார். பிறகு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிப்., 5ம் தேதி, காலை, 9:00 மணி முதல், 10:00 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறும் என்று அறிவிக்கை வெளியிடப்பட்டது. குடமுழுக்கிற்க்கான பூர்வாங்க பூஜை ஜன., 27ம் தேதி காலை, 9:00 மணிக்கு துவங்கி, பிப்., 1ம் தேதி வரை நடைபெறும் என, கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார்.