மரம் இல்லையேல் மழை இல்லை, மழை இல்லையேல் மனிதன் இல்லை. இத்தகைய முக்கியதுவம் வாய்ந்த மரங்கள் சமீபத்தில் ஏற்பட்ட இயற்க்கை சீற்றங்களால் சேதம் அடைந்தது.. அதனை உணர்ந்து ஊடக வரலாற்றில் முதல்முறையாக சத்தியம் ஃபவுண்டேஷன் மற்றும் சத்தியம் தொலைக்காட்யின் உன்னத முயற்ச்சியாக மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது. பூமையை காக்கும் திருவிழா என்ற பெயரில் தொடங்கிய இந்த பணியில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
இதன் முதற்கட்ட பணியாக சென்னை சின்ன நீலாங்கரையில் வியாழன் மாலை 3.30 மணிக்கும், வெள்ளி காலை 6.30 மணிக்கும், நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி.R.சீதாலட்சுமி, ஆச்சி மசாலா நிறுவனர் பத்மசிங் ஐசக், சத்தியம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் டாக்டர். ஐசக் லிவிங்ஸ்டன், மற்றும் பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.