அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், ராகுல்தேவ், கபீர்சிங், வித்யூலேகா ராமன், கோவை சரளா, சூரி, உள்பட பலர் நடித்துள்ள வேதாளம்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தை ‘வீரம்’ படத்தை இயக்கிய சிவா இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முன்னோட்டத்தை தற்போது பார்ப்போம்.
1. என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றியை அடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மீண்டும் அஜீத்துடன் இணைந்து தயாரிக்கும் படம்தான் ‘வேதாளம்’. அதே சமயத்தில் ‘வீரம்’ படத்திற்கு பின்னர் இயக்குனர் சிவா இரண்டாவது முறையாக அஜீத்துடன் இணையும் படம்.
2. அஜீத் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றது. அவற்றில் ஒன்றுதான் ‘வேதாளம்’ கேரக்டர். இந்த கேரக்டரின் பெயரையே படத்தின் டைட்டிலாக வைக்கலாம் என அஜீத் பரிந்துரை செய்ததால் ‘வேதாளம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டீசரை பார்த்த அனைவருமே இது ஒரு ஆக்சன் படம் என்றும் பேய்ப்படம் என்றும் திகில் படம் என்றும் கூறி வருகையில், இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த குடும்ப செண்டிமெண்ட் படம் என்று இயக்குனர் சிவா உள்பட படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
3. இந்த படத்தின் நகைச்சுவை அம்சங்கள் நிறைந்த படம் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த படத்தில் சூரி, மயில்சாமி, ‘லொள்ளு சபா’ சாமிநாதன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், ‘ஆதித்யா டி.வி.’ தாப்பா, மகேந்திரன் என ஒரு பெரிய காமெடி கூட்டமே நடித்துள்ளனர்.
4. அஜீத் நிஜ வாழ்க்கையில் பெண்களை தங்கைகள் போல் மதிக்கும் வழக்கம் உடையவர் என்றும் அவருடைய நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இந்த படத்தில் வரும் அஜீத்-லட்சுமி மேனன் கேரக்டர்கள் அண்ணன் – தங்கையாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இளம்பெண்கள் அனனவரும் தங்களுக்கு இப்படி ஒரு அண்ணன் இல்லையே என ஏங்க வைக்கும் அளவுக்கு இந்த படம் இன்னுமொரு ‘பாசமலராக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
5. சென்னை, கொல்கத்தா, இத்தாலி ஆகிய இடங்களில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெரம்பூர் பின்னி மில், மீனம்பாக்கம் பின்னி மில், மோகன் ஸ்டுடியோ, கிண்டி ரேஸ் கோர்ஸ், வடபழனி மலர் ஹாஸ்பிட்டல், ஃபிலிம் சிட்டி, மணி மஹால், தரமணியில் உள்ள ஐடி நிறுவனம் ஆகிய இடங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
6. ”வீர விநாயகா’ என்ற பாடல் அஜீத்தின் அறிமுகப்பாடலாகவும், ஆலுமா டோலுமா ‘வேதாளம்’ கேரக்டரின் அறிமுகப்பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்தாலியில் அஜீத்-ஸ்ருதிஹாசன் பாடல் ஒன்றும், ஆக்சன் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது.
7. முதலில் இந்த படத்தை பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்யத்தான் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் முடிவு செய்திருந்தார். ஆனால் அஜீத் இரவுபகலாக நடித்து கொடுக்க சம்மதித்ததால் இந்த படம் தீபாவளி ரிலீஸ் சாத்தியமாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் முதல் இறுதிவரை எவ்வித பிரச்சனையும் இல்லாமல் நடந்து வந்தது. ஆனால் கடைசி நாளின் படப்பிடிப்பில் அஜீத் நடனம் ஆடும்போது எதிர்பாராத வகையில் காயமடைந்தார். இருப்பினும் காயத்தின் வலியை பொருட்படுத்தாமல் அஜீத் கடைசி நாள் படப்பிடிப்பை முடித்து கொடுத்துள்ளார். இந்நிலையில் வரும்
24ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.
8. போலந்து நாட்டில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் ‘வேதாளம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இங்கிலாந்து உள்பட உலகின் பல நாடுகளில் ஒரு தமிழ்ப்படம் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
9. ‘வேதாளம்’ திரைப்படம் சென்சாரில் ‘யூ’ சர்டிபிகேட் பெற்றது மட்டுமின்றி தமிழக அரசின் வரிவிலக்கு சலுகையையும் பெற்றுள்ளது. 30% வரிவிலக்கு கிடைத்துள்ளதால் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகிஸ்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.
10. ‘வேதாளம்’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்கு முக்கிய சினிமா பிரபலங்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு உள்பட பலரை திரையரங்குகளில் முதல் காட்சியில் பார்க்க ரசிகர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
English Summary: 10 reasons to watch “VEDHALAM”.