பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு சமீபத்தில் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதை அடுத்து கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு கடந்த 5ஆம் தேதிஅசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டதாக அரசு தேர்வுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வை சுமார் 11 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த மே மாதம் 21ஆம் தேதி வெளியிடப்பட்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 29ஆம் தேதி அந்தந்த பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டன. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லத்தக்கதாகும் என்ற நிலையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை மட்டுமே அந்த சான்றிதழ்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். எனவே ஆகஸ்ட் 21ஆம் தேதி நெருங்கி வரும் நிலையில் நேற்று அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழை வழங்க அரசு முடிவு செய்தது. தற்கால மதிப்பெண் சான்றிதழின் காலக்கெடு முடிவதற்கு முன்னரே அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, எஸ்எஸ்எல்சி தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 5ஆம் தேதி அந்தந்த மாணவர்கள் படித்த பள்ளிகளில் வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் எஸ்எஸ்எல்சி முடித்த மாணவ-மாணவிகளுக்கு 5ஆம் தேதி அசல் மதிப் பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தனித் தேர்வர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கடந்த 5ஆம் தேதி ஒரே நாளில் சுமார் 11 லட்சம் மாணவ மாணவிகள் இந்த அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : 10th Original Mark Sheets was issued for 11 lakh students in a single day.