10ஆம் வகுப்பு அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு தனித் தேர்வர்கள் பதிவு செய்வதற்கான அறிவுறுத்தலை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ளது. இந்த செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்காத தனித் தேர்வர்கள் 2015-16 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “2015-16 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள அறிவியல் பாடத்தில் தோல்வியுற்ற தனித் தேர்வர்கள், முன்னதாக செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும். இந்த செய்முறை பயிற்சியில் பங்கேற்க ஜூன் மாத இறுதிக்குள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் பெயரை தனித் தேர்வர்கள் இன்று முதல் பதிவு செய்து கொள்ளலாம்.
அதன் பிறகு, மாவட்டக் கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று செய்முறை வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்பில் 80 நாள் வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே 2015-2016 பொதுத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளாத தனித் தேர்வர்கள் பொதுத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள். இதுகுறித்து மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ளவும், செய்முறை பயிற்சி தேர்வுக்கான விண்ணப்பங்களை பெறவும் www.tndge.in என்ற இணையதளத்தை பார்க்கும்படி மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
English Summary : 10th students Science Practical class registration will be starting today.