tnexams23414இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் வரும் திங்கள்கிழமை அதாவது ஜூலை 18ஆம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கடந்த ஜூன் 1-ஆம் தேதியன்று பள்ளிகள் மூலம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை செல்லத்தக்கதாகும்.

எனினும் மாணவர்களின் நலன் கருதி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் வரும் திங்கள்கிழமை (ஜூலை 18) காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அல்லது முதல்வர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும்.

தனித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை அவர்கள் தேர்வு எழுதிய மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary :10th standard original certificate of the issuing date announcement