train5216இன்று காலை ஜோலார்பேட்டை அருகே கன்னியாகுமரி – பெங்களூரு ஐலாண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான காரணத்தால் சென்னை – பெங்களூரு மார்க்கத்தில் செல்லும் 11 ரயில்களை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இந்த விபத்தில் எந்தவித உயிர்ச்சேதமும் இல்லை என்றும், தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மீட்புப்பணியை நேரில் பார்வையிட பெங்களூரு பிரிவு ரயில்வே மேலாளர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.நந்தகோபால் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.
20 பேர் காயம்:

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் குறித்த விபரங்கள் அறிய 044 – 2533 0714 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இந்த விபத்து காரணமாக சென்னை – பெங்களூரு மார்க்கத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விபரங்கள் பின்வருமாறு:
ஹெல்ப்லைன் எண் அறிவிப்பு:

1.சென்னை – பெங்களூரு இரண்டு அடுக்கு எக்ஸ்பிரஸ் (22625)

2.பெங்களூரு – சென்னை இரண்டு அடுக்கு எக்ஸ்பிரஸ் (22626)

3.சென்னை – பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் (12639)

4.பெங்களூரு – சென்னை பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் (12640)

5.சென்னை – பெங்களூரு லால்பாக் எக்ஸ்பிரஸ் (12609)

6.பெங்களூரு சென்னை எக்ஸ்பிரஸ் (12610)

7.சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12607)

8.பெங்களூரு – சென்னை லால்பாக் எக்ஸ்பிரஸ் (12608)

9.பெங்களூரு – அரக்கோணம் பேசஞ்சர் (56262)

10.ஜோலார்பேட்டை – பெங்களூரு எக்ஸ்பிரஸ் (16519)

11.அரக்கோணம் – பெங்களூரு பேசஞ்சர் (56261)

English Summary: 11 trains cancelled for Kanyakumari – Bangalore Express derailed.