செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக அங்குள்ள 150 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 528 ஏரிகளில் 150 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன. மேலும், 153 ஏரிகள் 75%மும், 137 ஏரிகள் 50%க்கும் மேலாக நிரம்பியுள்ளன என தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *