TH-SWEEPING_1374098gசென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளில் இரவு நேர துப்புரவு பணியில் 1,741 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகரட்சி அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

சென்னையில் அனைத்து மாநகராட்சி மண்டலங்களிலும், பகல் நேர துப்புரவு பணி மேற்கொள்ள இயலாத இடங்களான போக்குவரத்து நெரிசல் மிகுந்த பேருந்து சாலைகள், முக்கிய உட்புற சாலைகள், மார்க்கெட் பகுதிகளில் இரவுநேர துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் தற்போது 1,741 துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பணியில் தினமும் 1,055 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. இப்பணியாளர்களின் பாதுகாப்புக்காக ஒளிரும் மேலாடைகள் வழங்கப்பட்டுள்ளது. இப்பணியை கண்காணிக்க செயற்பொறியாளர் நிலையில் பணி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English Summary: 1,700 employees in Chennai in the night-time sanitation work. Corporation Announcement