2 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஜியோ
ஜியோ நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய ஆட்-ஆன் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் சலுகையுடன் 2 ஜிபி வரை கூடுதல் டேட்டா பெற முடியும். மைஜியோ செயலியில் காணப்படும் இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
மேலும் ஜியோ டிஜிட்டல் சலுதையுடன் எவ்வித அழைப்புகளோ அல்லது எஸ்.எம்.எஸ். போன்றவை வழங்கப்படவில்லை. புதிய சலுகை ஜூலை 31-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுவதாக ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ பயனர் ஏற்கனவே தினமும் 1.5 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படும் ரூ.399 பிரீபெயிட் சலுகையை தேர்வு செய்திருந்தால் டிஜிட்டல் சலுகை செயல்படுத்தியதும் தினமும் 3.5 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். எனினும் இந்த சலுகை ஜூலை 31 வரை வழங்கப்படுவதால், பெரும்பாலும் பயன்பாடற்றதாகவே பார்க்கப்படுகிறது. எனினும் டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களில் இந்த சலுகை சில பயனர்களுக்கு ஆகஸ்டு 2-ம் தேதி நிறைவுறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இதே மாதம் ஜியோ போன் மான்சூன் ஹங்காமா சலுகை அறிவிக்கப்பட்டது. இதில் பயனர்கள் தங்களது பழைய ஃபீச்சர்போனினை எக்சேஞ்ச் செய்து புதிய ஜியோபோனினை ரூ.501 விலையில் வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டது. இந்த தொகையும் முழுமையாக திரும்ப பெறமுடியும்.
எனினும் திரும்ப பெற ரூ.99 சலுகையை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். அந்த வகையில் எக்சேஞ்ச் சலுகையின் படி பயனர்கள் ரூ.1095 (ரூ.501 + ரூ.594) செலுத்த வேண்டியிருக்கும். ரூ.99 ஜியோபோன் சலுகையில் பயனர்களுக்கு தினமும் 0.5 ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.