தென்கொரியாவில் வரும் அக்டோபர் மாதம் 1 முதல் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இரண்டு தமிழ்ப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தென்கொரியாவின் உள்ள பூஷன் என்ற நரில் Busan International Film Festival நடைபெறுவது உண்டு. இந்த விழா கடந்த 1996ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் நிலையில் இவ்வாண்டுக்கான திரைப்பட விழா வரும் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்குகிறது. இந்த திரைப்படவிழாவில் உலகின் பல நாடுகளின் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் திரையிடப்படும். இதில் சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து விழாகுழுவினர் விருதுகள் வழங்குவர்.
இந்நிலையில் இவ்வருடம் இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்ள மணிரத்னம் இயக்கிய ‘ஓகே கண்மணி’ மற்றும் விஜய்சேதுபதி நடித்த ‘ஆரஞ்சுமிட்டாய்’ ஆகிய திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்ற இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதால் கோலிவுட் திரையுலகம் பெருமை கொள்கிறது. இந்த படங்கள் இவ்விழாவில் விருதை வெல்ல வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்த்து வருகினறனர்.
இந்தியாவில் இருந்து கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த இந்த விழாவில் கலந்து கொண்ட கே.என்.டி.சாஸ்திரி இயக்கிய The Rite… A Passion என்ற தெலுங்கு திரைப்படம் சிறந்த திரைப்படம் என்ற விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary : OK Kanmani and Orange mittai enters Busan International Film Festival in South Korea.