education
தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் இருந்த ஒரு ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பான பி.எட். பட்டயப்படிப்பை இனிவரும் காலங்களில் இரண்டு ஆண்டு பட்டப்படிப்பாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆணையை தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி பிறப்பித்திருந்தது. இந்த ஆணைக்கு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் வரவேற்பு அளித்துள்ளது.

கற்பித்தலில் ஆசிரியர்களின் திறமையை வளர்க்கவும், ஆசிரியர்களின் தனித்திறமையை வளர்க்கவும் இரண்டு ஆண்டு பட்டப்படிப்பு அவசியம் என்று கூறிய ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக உறுப்பினர்கள் புதிய பாடத்திட்டப்படி யோகா, உடல்நல கல்வி, கலை உள்பட 16 பாடங்கள் படிக்க வேண்டும் என்றும் கூறினர். தற்போதைய பாடத்திட்டத்தில் 12 பேப்பர்கள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பி.எட். பட்டப்படிப்பை இரு ஆண்டாக நீட்டிப்பது குறித்த நடைமுறை விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளது.

English Summary:2 year degree turns Diploma B.Ed.