tnpscதுணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி தற்போது முடிவடைந்தது. வெறும் 74 பணியிடங்களுக்கு 2 லட்சத்து 22 ஆயிரத்து 771 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகிய பதவிகளுக்கு 74 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக முறையாக அறிவிப்பு ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆன்லைனில் அறிவிக்கப்பட்டது இந்த பதவிகளுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்துள்ளது. இதுவரை மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 771 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பொறியியல் படித்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

விண்ணப்பாரர்கள் அனைவருக்கும் முதலில் முதல்நிலை எழுத்து தேர்வு வைக்கப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வை எழுதுவார்கள். அதிலும் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் அதிக மதிப்பெண் எடுப்பவர்கள் அதிகாரிகளாக தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிகளை எவ்வளவு விரைவாக முடிவை அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அறிவிக்க உள்ளோம்.

மேலும் நேர்முகத்தேர்வுடன் கூடிய குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் கடந்த ஜூலை 17-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. அவர்கள் மெயின்தேர்வில் எடுத்த மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வில் எடுத்த மதிப்பெண் விவரம் ஆகியவை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு வருகிற 24-ந் தேதி முதல் செப்டம்பர் 1-ந் தேதி வரை நடக்க உள்ளது. 1,136 பணியிடங்களுக்கு 2ஆயிரத்து 265 பேர் அழைக்கப்பட உள்ளனர்.

இவ்வாறு சி.பாலசுப்பிரமணியம் அவர்கள் கூறியுள்ளார்

English Summary:2,22,771 applied for 74 vacancies.details of Group1 applicants.