இந்தியாவின் ஏழு முன்னணி ஐஐடி நிறுவனங்கள் இணைந்து ஆன்லைனில் படிக்கக்கூடிய வகையில் 24 விதமான படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சென்னை ஐஐடியும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, மும்பை, டெல்லி, கவுஹாத்தி, கான்பூர், கரக்பூர், ரூர்க்கி, ஆகிய இடங்களில் உள்ள 7 ஐஐடி கல்வி நிறுவனங்களுடன் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சமும் இணைந்து தேசிய தொழில்நுட்ப மேம்பாட்டு கல்வி திட்டம் (NPTEL) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
இதன்படி கம்ப்யூட்டர் சயின்ஸ், ஏரோஸ்பேஸ், எலெக்ட்ரிக்கல், மெட்டலர்ஜிக்கல் இன்ஜினியரிங், நிர்வாகவியல் ஆகிய படிப்புகள் உள்பட மொத்தம் 24 ஆன்லைன் சான்றிதழ் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த படிப்புகள் ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்கான தேர்வுகள் வரும் செப்டம்பர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் என்றும் இந்த சான்றிதழ் படிப்புகளின் விவரங்களை www.onlinecourses.nptel.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளுக்கு ஆன்லைனிலேயே பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளில் சேர பதிவு இலவசம். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான பாடங்களை தேர்வுசெய்து படித்துப் பயன்பெறலாம். தேர்ச்சி பெறுவோருக்கு NPTEL மற்றும் ஐஐடி இணைந்து சான்றிதழ் வழங்கும்.
இவ்வாறு சென்னை ஐஐடி ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் ஆன்ட்ரு தங்கராஜ், பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
English Summary : IIT from Chennai, Mumbai, Delhi, Guwahati, Kanpur, Kharagpur and Roorkee introduced 24 new online courses.