சென்னையில் அவ்வப்போது காவல்துறை அதிகாரிகள் விருப்பத்தின் பேரிலும், ஒழுங்கு நடவடிக்கையின் பேரிலும் மாற்றப்பட்டு வரும் நிலையில் தற்போது 26 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டனர். இதில் முதல்முறையாக விபசார தடுப்பு பிரிவிற்கு பெண் இன்ஸ்பெக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் 26 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை மாற்றி, போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் நேற்று உத்தரவிட்டார். விபசார தடுப்பு பிரிவிற்கு முதல் முறையாக
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி என்ற பெண் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஏற்கிறார். இன்ஸ்பெக்டர் சபாபதி அங்கிருந்து மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜெயலட்சுமி, அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும், தயாள் ஆயிரம்விளக்கு சட்டம்–ஒழுங்கு பிரிவு, எஸ்.விஜயகுமார் ராயப்பேட்டை சட்டம்–ஒழுங்கு பிரிவு, சிபுகுமார் பட்டினப்பாக்கம் சட்டம்–ஒழுங்கு பிரிவு, தட்சிணாமூர்த்தி துறைமுகம் சட்டம்–ஒழுங்கு பிரிவிற்கும் இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புகழேந்தி திருமுல்லைவாயல் சட்டம்–ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். கே.விஜயகுமார் சைதாப்பேட்டை சட்டம்–ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டரானார். கே.மோகன்தாஸ் மெரினா சட்டம்–ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டார். ராஜசேகரன், டி.பி.சத்திரம் சட்டம்–ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசி, எழும்பூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டராக பொறுப்பு ஏற்கிறார்.
அண்ணாதுரை, விஜயராகவன், செங்குட்டுவன், கோபாலகுரு ஆகியோர் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
English Summary: 26 inspectors Transferred in Chennai.The first female Inspector brothel prevention Division