pollingboothschennaiதேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவு காரணமாக சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே. ராஜேந்திரன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அசுதோஷ் சுக்லா சென்னை போலீஸ் கமிஷனராக நேற்று பொறுப்பேற்றுகொண்டார். பொறுப்பேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:

சென்னைக்குட்பட்ட 16 சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட 406 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்காக 18 கம்பெனிகளை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை போலீசார் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அச்சமில்லாத வகையில் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன’ என்று கூறினார்.

அதேபோல் சட்டம் ஒழுங்கு புதிய டி.ஜி.பி.யாக நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட சைலேந்திர பாபு, மற்றும் புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள கே.பி. மகேந்திரன் ஆகியோர் நேற்று தேர்தல் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதனிடையே தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சார்ந்த பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக சுமார் 30 ஆயிரம் துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்படுவார்கள் என தமிழ்நாடு தேர்தல் ஆணையாளர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகள் கச்சிதமாக இருப்பதால் இம்முறை தேர்தல் அமைதியாக எவ்வித வன்முறையும் இன்றி நடைபெறும் என நம்பப்படுகிறது.

English Summary: 406 sensitive polling stations in Chennai. New Police Commissioner Information.