vitcounselling15513பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான 3 கட்ட கலந்தாய்வு ஏற்கனவே முடிந்து அவர்கள் கல்லூரிகளில் இணைந்து அவர்களுக்கான பாடம் தொடங்கிவிட்ட நிலையில் இன்று 4-ம் கட்ட கலந்தாய்வு சென்னையில் தொடங்குகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த 4ஆம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 8,500 மாணவ, மாணவிகளுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடந்த மருத்துவப் படிப்புக்கான 3-ம் கட்ட கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 59 எம்பிபிஎஸ் இடங்கள், கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 15 எம்பிபிஎஸ் இடங்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 10 பிடிஎஸ் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 8 எம்பிபிஎஸ் இடங்கள், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 75 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 167 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன.

இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான 4-ம் கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் இன்றும், நாளையும் நடக்கவுள்ளது. இந்த கலந்தாய்வில் பங்கேற்குமாறு மொத்தம் 8,500 மாணவ, மாணவிகளுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்க மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார்.

English Summary:4th Phase Counselling for MBBS Studies in Chennai.