prepare-ias-upsc-examநிர்வாக வசதிக்காகவும் விருப்பத்தின் பேரிலும், நடவடிக்கைகளின் பேரிலும் தமிழகத்தில் அவ்வப்போது ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் சென்னை ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை இடமாற்றம் செய்து உள்துறை செயலர் இன்று உத்தரவிட்டுள்ளார்.

மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குறித்த விபரங்கள் பின்வருமாறு:

1.சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக எஸ்.ஆர்.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
2.அடையாறு காவல் துணை ஆணையராக சுந்தர வடிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
3.சென்னை காவல் நிர்வாக துணை ஆணையராக ராதிகா நியமனமிக்கப்பட்டுள்ளார்.
4.சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக எஸ்.மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
5.சென்னை பெரு நகர வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக அபிநவ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கண்ட அதிகாரிகள் விரைவில் தங்கள் பொறுப்புகளை ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது.

English Summary :5 IAS Officers Transferred in Chennai