Law_counsellingபொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளது. இந்நிலையில் சட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியுள்ளது. மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் நேற்றிய முதல் நாள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.

சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டபல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்படடு ஆகிய 6 சட்டக்கல்லூரிகள் உள்ளன. இந்த சட்டக்கல்லூரிகளில் 5 வருட சட்டக்கல்வியில் (பி.ஏ.,எல்.எல்.பி.) சேர மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 5ஆயிரத்து 355 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 4 ஆயிரத்து 996 பேர் விண்ணப்பித்த படிவங்கள் மட்டும் தகுதியானதாக இருந்தன. 1,052 இடங்களில் சேர கலந்தாய்வு நேற்று டாக்டர் அம்பேத்கர் சட்டபல்கலைக்கழகத்தில் தொடங்கியது. நேற்றைய முதல் நாளில் 306 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இந்த கலந்தாய்வு ஜூலை 24வரை அதாவது நாளை மறுநாள் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கிவைத்தார். அவர் முதல் 10 மாணவ-மாணவிகளுக்கு கல்லூரியில் படிப்பதற்கான ஆணையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் துணைவேந்தர் பேராசிரியர் வணங்காமுடி, சட்டத்துறை செயலாளர் பூவலிங்கம், சட்டக்கல்வி இயக்குனர் பேராசிரியர் சந்தோஷ்குமார், பதிவாளர் சவுந்தரபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முதல் 10 இடங்களை தேர்ந்து எடுத்த மாணவ-மாணவிகள் வருமாறு:-

1.ஜி.செல்வக்குமார் இம்மானு வேல்.

2.ஏ.குமார்

3.சி.சங்கீதா

4.ஜே.நிஜந்தன்

5.கே.செல்வபார்த்தீபன்

6.டி.சுந்தரபாண்டி

7.எம்.சிவஅருள்

8.ஏ.பாக்கியா கிங்ஸ்லி

9.எம்.தினேஷ்.

10.வி.பெனிஷா

English Summary:5-year study of law counseling. Minister inaugurated