65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி?
வயதில் மூத்த குடிமக்களும் ஜருகண்டி சொல்லித் தள்ளிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள் இனி யாரைத் தள்ளும் என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது.
1) ஆதார் அட்டை அவசியம்.
2) 65 வயது முடிந்திருக்க வேண்டும்
3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.
4) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தரிசனம் நேரம்.
5) தினம் 700 பேருக்கும் அனுமதி உண்டு.
6.) உதவி செய்வதெற்கென உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவளுக்கும் ஆதார் அவசியம்.
7) காலை உணவு பால் இலவசம்.
8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும்.
9) ஒருமுறை சென்றவர் 3 மாத காலத்திற்கு பின்னரே மீண்டும் அனுமதிக்கப்படுவர்.
இவை அனைத்தும் இலவச சேவையாகும். பயனுள்ள தகவலை பகிரலாமே. இந்த தகவல்கள்அனைத்தும் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை!
ௐ நமோ நாராயணா..!
யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும்
அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னக்காரர்கள் தெரியுமா? எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்.
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், மீனம் லக்னம் உடையவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும்.
வருடம் ஒரு முறை மட்டும் செல்லும் லக்னம் காரர்கள் சிம்மம், தனுசு, கும்பம்.
ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம்
ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”
ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித,
வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே…!!!
பொதுப் பொருள்:
திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.
ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா உங்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம்…
ௐ நமோ நாராயணா..!