டில்லி: வரும் டிசம்பர் 31க்குள் அனைத்து இல்லங்களுக்கும் மின் இணைப்பு வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்ட்டுள்ளார்.
நாடெங்கும் மின்மயமாக்கும் திட்டம் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது அப்படி இருந்தும் இன்னும் பல கிராம வீடுகளில் ஒற்றை விளக்கு கூட இல்லாத நிலை உள்ளது. இது குறித்து பல ஊடகங்கள் ஏற்கனவே செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று பிரதமர் இல்லத்தில் இது குறித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது
இந்த கூட்டத்தில் மின்சார வசதி, மறுசுழற்சி எரிசக்தி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயும், நிலக்கரி உள்ளிட்டவைகள் குறித்த கட்டமைப்பு பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் தலைமையில் அந்தத் துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிடோர் கலந்துக் கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த 2017 செப்டம்பரில் தொடங்கப்பட்ட சௌபாக்கியா திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் வரும் டிசம்பர் 31 க்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டார். கடந்த 2011 ல் நடந்த கணக்கெடுப்பின்படி சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரியாக பின் தங்கியோர் இந்த திட்டத்தில் பயனடைவார்கள்.
இந்த திட்டத்தின் கீழ் வராதோருக்கு ரூ.500 முன் பணம் செலுத்தினால் மின் இணைப்பு வழங்கலாம் என மோடி உத்தரவு இட்டுள்ளார். அத்துடன் விவசாயிகளுக்கு அதிக அளவில் பயன் தரும்படி சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என மின் வாரிய அமைச்சகத்தை மோடி வற்புறுத்தி உள்ளார்.