ஆகஸ்ட் 15-ல் இருந்து நடைமுறைக்கு வரவுள்ள புதிய ரயில்வே கால அட்டவணை நாளை இணையத்தளத்தில் வெளியி்டப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ரயில்வே கால அட்டவணை ஜூன் மாதத்துடன் முடிவடைய இருந்த நிலையில் ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரயில்வே கால அட்டவைணையை அந்தந்த ரயில்வே மண்டலங்களே தயாரித்து வந்தன. இந்தமுறை ஐஆர்சிடிசி ரயில்வே கால அட்டவணையைத் தயாரித்து வருகிறது.
இந்த புதிய ரயில்வே கால அட்டவணை ஆகஸ்ட் 15 இல் இருந்து நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் நாளை இணையத்தளத்தில் வெளியிட உள்ளது. புதிய கால அட்டவணையில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பல விரைவு ரயில்களின் புறப்படும் நேரமும், சேரும் நேரமும் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. புதிய கால அட்டவணையை புத்தகமாக அச்சிடும் பணி மும்பையில் நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் புத்தகங்கள் ரயில் நிலையத்தில் விற்பனைக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.