கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளில் சிக்கி இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், மீட்பு பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும், காணாமல் போனவர்கள் பற்றி அறிந்து கொள்ளவும், கூகுள் சா்ர்பில் பெர்சன் ஃபைன்டர் டூல் ஆக்டிவேட் செய்யப்பட்ட நிலையில், ஃபேஸ்புக் தரப்பில் சேஃப்டி செக் எனேபிள் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர டெலிகாம் நிறுவனங்கள் சார்பில் இலவச சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அமேசான் இந்தியா சார்பில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருப்போருக்கு உதவ பிரத்யேக வலைப்பக்கம் துவங்கப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா சார்பில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறது. அமேசான் இந்திய முகப்பு பக்கத்தில் கேரள வெள்ள பாதிப்புக்கு உதவக்கோரும் பேனர் இடம்பெற்றிருக்கிறது.