ராமாயண யாத்திரை சிறப்பு ரயில், மதுரையில் இருந்து நவம்பர் 14ம் தேதி இயக்கப்பட உள்ளது.
800 பேர் பயணிக்கக் கூடிய இந்த ரயில், ராமாயணத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் புனிதத் தலங்களைக் கடந்து, 15 நாட்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் வந்து சேரும். மதுரையில் இருந்து சென்னை வழியாக ரேணி குண்டா சென்றடைந்த பின், ஹோஸ்பட் பகுதியில் ராமர் தரிசனம் தொடங்கும்.
பின்னர் நாசிக் ரோடு பகுதியில் ராமாயண காதையின் ஆரண்ய காண்டம் தொடர்பான ஆலய தரிசனம் இடம்பெறும். அயோத்திய காண்டம், பால காண்டத்துடன் தொடர்புடைய திருத்தலங்களுக்கும் இந்த ரயில் செல்லும். இப்பயணத்தின் போது உணவு, தர்ம சத்திரங்களில் உறைவிடம் போன்றவையும் வழங்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதே போன்று இலங்கைக்கும் தனியாக ஒரு புனித யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது.