தமிழகத்தில் உயர் கல்வித் துறை செயலாளர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளர் என 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை பிறப்பித்தார். அதன் விவரம்: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)
குமார் ஜயந்த்: கைத்தறி, கைத்திறன்கள் மற்றும் துணி நூல், காதித் துறை முதன்மைச் செயலாளர் (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை).
தயானந்த் கட்டாரியா: கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் (மின் நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்).
ஷம்பு கல்லோலிகர்: சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலாளர் (தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குநர்) மேலும் அவர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பொறுப்பை கூடுதலாக வகிப்பார்.
முகமது நசிமுதின்: தமிழ்நாடு எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் (சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர்)
டி.கே.ராமச்சந்திரன்: இந்து சமய அறநிலையங்கள் துறை ஆணையாளர் (அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர்)
டி.உதயசந்திரன்: தொல்லியல் துறை ஆணையாளர் (பள்ளிக் கல்வித் துறையின் பாடத் திட்டப் பிரிவு செயலாளர்)
சுனில் பாலிவால்: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை முதன்மைச் செயலாளர் (உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர்)
சந்தோஷ் கே.மிஸ்ரா: மின் ஆளுமை நிறுவனத்தின் ஆணையாளர், (தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு கழகத்தின் நிர்வாக இயக்குநர்) தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் நிர்வாக இயக்குநர் பொறுப்பையும் இவர் கூடுதலாக கவனிப்பார்.
சந்தோஷ் பாபு: தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர் (தமிழ்நாடு கைவினைப் பொருள்கள்-கைத்திறன்கள் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்)
வி.அருண்ராய்: தொழில் துறை கூடுதல செயலாளர் (மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆணையாளர்)
பி.மகேஸ்வரி: மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆணையாளர் (வணிகவரிகள் துறை இணை ஆணையாளர்-நிர்வாகம்)
மங்கத் ராம் ஷர்மா: உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் (தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை முதன்மைச் செயலாளர்)
அனி மேரி ஸ்வர்னா: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் இயக்குநர் (தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர்)
கே.பணீந்திர ரெட்டி: அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் (கைத்தறி, கைத்திறன்கள் மற்றும் துணிநூல் துறை முதன்மைச் செயலாளர்)
அசோக் டோங்ரே: சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநர் (பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையாளர்)
ஆர்.ஜெயா: தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (இந்து சமய அறநிலையங்கள் துறை ஆணையாளர்)
சந்திரகாந்த் காம்ப்ளே: மின் நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்)
எம்.எஸ்.சண்முகம்: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநர் (தொழில் துறை சிறப்புச் செயலாளர்)
ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல்: தமிழ்நாடு வீட்டுவசதித் துறை நிர்வாக இயக்குநர் (தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் நிர்வாக இயக்குநர்)
பி.சந்திரமோகன்: தமிழ்நாடு கைவினைப் பொருள்கள் மற்றும் கைத்திறன்கள் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர்)
ஜே.யு.சந்திரகலா: தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை துணைச் செயலாளர்)
சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளராக உள்ள டி.கார்த்திகேயன், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.