இந்திய அஞ்சல் துறையின் ‘போஸ்ட் பேமென்ட் வங்கி’ இன்று நாடு முழுவதும் தொடங்கப்படுகிறது. பிரதமர் மோடி இதனைத் தொடங்கி வைக்க உள்ளார். போஸ்ட் பேமென்ட் வங்கி தொடங்கப் படுவதன் மூலம் இந்தியா வில் கிராமப்புற வங்கிச் சேவை மூன்று மடங்கு அதிகரிக்கும்.
1.30 லட்சம் மையங்கள்:
தற்போது இந்திய கிராமப் புறங்களில் 50,000 வங்கிக் கிளைகள் உள்ளன. அஞ்சல் துறைக்கு நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 1,30,000 சேவை மையங்கள் உள்ளன. இந்த சேவை மையங்கள் வங்கிச் சேவைகளை அளிக் கும் மையமாக மாற்றப்படு வதால் இந்திய கிராமப்புற மக்களுக்கு வங்கிச் சேவை எளிதாக கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.
பல்வேறு வகையிலும் மக்கள் எளிதாக அணுகும் வகையில் வங்கிச் சேவை களை அளிக்க உள்ளோம் என்று போஸ்ட் பேமென்ட் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சுரேஷ் சேத்தி கூறி யுள்ளார். போஸ்ட் பேமென்ட் வங்கிகள் தொடங்கப்படுவதன் மூலம் கிராமப்புற வங்கிச் சேவை மூன்றரை மடங்கு அதிகரிக்கும் என்றார்.
இந்த வங்கிச் சேவைக்காக அஞ்சல் துறையில் உள்ள 3 லட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் கருவிகள், கையடக்க கருவிகளை இவர் கள் கையாளுவர். வாடிக்கை யாளர்களின் வீடுகளுக்குச் சென்று வங்கிச் சேவைகளை அளிக்க உள்ளனர்.
கிராமப்புற வங்கிச் சேவை:
இந்தியாவில் கிராமப்புற மக்கள் எளிதாக அணுகும் வகையில் வங்கிச் சேவையை அளிப்போம் என்கிற நம் பிக்கை உள்ளது. மக்கள் தாங் களாகவே மின்னணு பரிவர்த் தனை கருவிகளை பயன் படுத்துவதற்கு முன்னர் அவர் களுக்கான உதவிகளையும் போஸ்ட் பேமென்ட் வங்கி ஊழியர்கள் செய்வார்கள் என்றும் சேத்தி கூறினார்.
தலைமைச் செயல் அதி காரியாக நியமிக்கபட்டுள்ள சேத்தி, வோடபோன் நிறு வனத்தின் எம்-பேசா பணப் பரிமாற்ற பிரிவினை கவ னித்து வந்தார்.
இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் மூன்று வகையான சேமிப்பு கணக்குகள் தொடங் கலாம். வழக்கமான சேமிப்பு கணக்கு தவிர, மின்னணு சேமிப்பு கணக்கு மற்றும் அடிப்படையான சேமிப்பு கணக்கு என மூன்று விதமான வசதிகள் கிடைக்கும். இந்த சேமிப்பு கணக்குக்கு ஆண் டுக்கு 4 சதவீத வட்டி வழங் கப்படும்.
குறைந்தபட்ச இருப்புத் தொகை, குறைந்தபட்ச டெபா சிட், பராமரிப்புக் கட்டணம் என கட்டுப்பாடுகள் இல்லாத வகையில் இந்த சேவைகள் இருக்கும். இருப்புத் தொகை இல்லாமல் கணக்கு தொடங் கலாம். 10 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கும் போஸ்ட் பேமென்ட் வங்கியின் சேவை கள் கிடைக்கும்.