சாம்சங் கேலக்ஸி ஜெ4 பிரைம் மற்றும் கேலக்ஸி ஜெ6 பிரைம் ஸ்மார்ட்போன்கள் அந்நிறுவனத்தின் வியட்நாம் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் SM-J415F/DS மற்றும் SM-J610F/DS என்ற மாடல் நம்பர்களை கொண்டுள்ளது.
பட்ஜெட் விலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் சமீபத்தில் சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி ஜெ4 மற்றும் கேலக்ஸி ஜெ6 மாடல்களுடன் விற்பனையாகும் என கூறப்படுகிறது. இரண்டு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், குவால்காம் பிராசஸர்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன்கள் நெதர்லாந்து மற்றும் வியட்நாம் நாட்டு வலைத்தளங்களில் வெளியானது. ஏற்கனவே வெளியான சாம்சங் கேலக்ஸி ஜெ4 மாடலில் 5.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720×1280 பிக்சல் சூப்பர் AMOLED பேனல், 16:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கிறது.
இத்துடன் குவாட்-கோர் சாம்சங் எக்சைனோஸ் 7570 சிப்செட், 2 ஜிபி / 3 ஜிபி ரேம், 16 ஜிபி / 32 ஜிபி மெமரி, புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி ஜெ6 மாடலில் 5.6 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED பேனல், 18:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வடிவமைப்பு கொண்டுள்ளது. இதில் எக்சைனோஸ் 7870 பிராசஸர், 3 ஜிபி / 4 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.