புதுடெல்லி: இந்தியாவின் விமான போக்குவரத்துத்துறை மந்திரி சுரேஷ் பிரபு கூறுகையில், உலகின் மிக அதிக விமான போக்குவரத்து வசதி கொண்ட 3-வது நாடாக அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா வருவதற்காக முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதற்காக அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில், (இந்திய மதிப்பில் 4.2 லட்சம் கோடி ரூபாய்) நாடு முழுவதும் 100 விமான நிலையங்கள் கட்டப்படும் என அவர் கூறியுள்ளார். மேலும், இந்த கட்டுமானத்தில் அரசு மற்றும் தனியார் இணைந்து செயல்படும் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.