வினாயகருக்கு மட்டும்தான் பல பெயர்கள். கணேஷா, கணபதி, பிள்ளையார், வினாயகர், யானை முகன், ஐங்கரன், முஷீக வாகனன், கயமுகன், ப்ரணவன், இது போல் இன்னும் பலப் பல பெயர்கள் இவருக்கு உண்டு.
இளம் பெண்களின் செல்ல கடவுள். குழந்தைகளின் கார்டூன் கடவுளாகவும் இருக்கிறார். மேலும் அவருடைய வித விதமான ஸ்டைலில் செய்ய்ப்படும் சிலைகள் கடைகளில் விற்கப் படுகிறது.
வினாயகர் சதுர்த்தி ஆரம்பித்த இடம்:
விநாயகர் சதுர்த்தி முதலில் ஆரம்பித்தது மகராஷ்டிராவில். சத்ரபதி சிவாஜி மன்னனால் வினாயகர் சிலைகள் செய்து பண்டிகையாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் விதவிதமான பிள்ளையார் சிலைகள் செய்து கோலாகோலமாக கொண்டடிய போது மெல்ல மற்ற ஊர்களுக்கும் பரவி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
வினாயகர் சதுர்த்தி பிறந்த கதை:
வினாயகர் பார்வதிக்கும் சிவனுக்கும் பிறந்த முதல் தமையன். அவர் பிறந்த நாளே வினாயகர் சதுர்த்தி என்று கொண்டாடுகிறோம். அவருடைய யானை முகம் பற்றி நிறைய கதைகள் இருந்தாலும் இந்த கதையே பிரச்சித்தி பெற்றது.
வினாயகரரை சிவனில்லாமல் பார்வதி தனித்து உருவாக்கினார். முழுக்க சந்தனத்தினால் பிள்ளையாரை உருவாக்கியபின், குளிக்க செல்லும்போது பிள்ளையாரை காவல் வைத்துவிட்டு பார்வதி குளிக்கச் சென்றார்.
அப்போது சிவன் உள்ளே நுழைய முயற்சிக்கும் போது, வினாயகர் உள்ளே வரவிடாமல் சிவனைத் தடுத்தார். சிவனுக்கு வினாயகர் பார்வதியால் உருவாக்கப்பட்ட மகன் என்று தெரியாது. ஆகவே வினாயகருடன் வாதிட்டார். இறுதியில் கோபம் வந்து வினாயகரின் தலையை கொய்தார்.
தலையில்லாமல் தரையில் வீழ்ந்திருக்கும் வினாயகரைப் பார்த்து அதிர்ந்த பார்வதி பின் கோபமுற்று சிவனிடம் சண்டையிட்டாள்.
பிள்ளையாரின் தலையை மீண்டும் பொருத்தவில்லையென்றால் தான் காளி உருவம் எடுக்கப் போவதாக சொன்னவுடன் சிவன் கவலையுற்று தன்னுடைய கணங்களிடம் எந்த தலை கிழக்கு பார்த்து இருக்கிறதோ அதனை கொய்து வாருங்கள் என்று ஆணையிட்டார்.
அவர்கள் சென்ற போது அவ்வாறு கிழக்கு பார்த்து இருந்தது ஒரு யானையின் தலை, உடனே மறு நொடியே யானையின் தலையை கொய்து கொண்டு வந்தனர். அதனை பிள்ளையாருக்கு பொருத்திய பின் பார்வதி சாந்தமனார்.
பிள்ளையருக்கு அர்ச்சனை செய்ய வேண்டிய 21 மலர்களும் அதன் பலன்களும்:
பிள்ளையார் சதுர்த்திக்கு பூஜை செய்யும் போது கட்டாயமாக 21 மலர்களைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். இவை அதற்குத் தகுந்த பலன்களை தரும்.
இலந்தை இலை: கல்வி வளம் கிடைக்கும்
அருகம்புல்: எல்ல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
நாயுருவி: முகப் பொலிவும், அழகும் கூடும்.
அரசம் இலை: உயர்பதவியும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.
மரிக்கொழுந்து இலை பலன்: இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.
முல்லை இலை பலன்: அறம் வளரும்
வில்வம் இலை: மகிழ்ச்சி மற்றும் விரும்பிய அனைத்தும் கிடைக்கும்.
கரிசலாங்கண்ணி இலை: இல்லற வாழ்க்கையில் செல்வம் சேரும்.
கண்டங்கத்தரி – வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
ஊமத்தை இலை: பெருந்தன்மை கிடைக்கும்
வன்னி இலை:- பூமியிலும், சொர்க்கத்திலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.
அரளி இலை: எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.
எருக்கம் இலை: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்பு கிடைக்கும்
மருதம் இலை: குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
விஷ்ணுகிராந்தி இலை பலன்: கூர்மையான அறிவு கைவரப்பெறும்.
மாதுளை இலை: புகழும், நல்ல பெயரும் கிடைக்கும்
தேவதாரு இலை: எதையும் தாங்கும் மனோதைரியம் கிட்டும்.
ஜாதிமல்லி இலை: சொந்த வீடு, மனை பாக்கியம் கிடைக்கப்பெறும்
தாழம் இலை: செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.
அகத்தி இலை: கடன் தொல்லை நீங்கும்
தவனம் ஜகர்ப்பூரஸ இலை: நல்ல கணவன் மனைவி அமையும்