திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று காலை நடைபெற்ற சக்கர ஸ்நானத்துடன் நிறைவடைந்தது. இந்த பிரம்மோற்சவத்தில் கடந்த 8 நாட்களில் மட்டும், 5.91 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித் துள்ளனர். ரூ.20.53 கோடி உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகள் பல்வேறு வாகன சேவைகள் மூலம் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தனர். நிறைவு நாளான நேற்று காலை, கோயிலுக்கு அருகே உள்ள தெப்பக் குளத்தில் சக்கர ஸ்நான புனித நீராடல் நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. முன்னதாக, உற்சவ மூர்த்தி களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ராய் மலையப்ப சுவாமி மற்றும் சக்கரத்தாழ்வார் தங்க திருச்சியில் கோயிலில் இருந்து ஊர்வலமாக தெப்பக்குளம் அருகே உள்ள வராக சுவாமி கோயிலுக்கு எழுந்தருளினர். அங்கு,சக்கரத்தாழ்வார் உட்பட உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திரு மஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து சக்கரத் தாழ்வாரின் புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, தெப்பக் குளத்தில் கூடி இருந்த ஆயிரக்கணக் கான பக்தர்கள், ‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷமிட்டபடி, குளத்தில் மூழ்கி புனித நீராடினர். இதனைத் தொடர்ந்து, இரவு 9 மணி யளவில் கோயில் கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருட சின்னம் பொறித்த பிரம்மோற்சவ கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வுடன் ஏழுமலையானின் வரு டாந்திர பிரம்மோற்சவம் நிறை வடைந்தது. அக்டோபர் 10-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.