சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: வரும் 6-ம் தேதிவாக்கில் தென் கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, அது ஈரான், ஈராக் நோக்கி நகரக் கூடும் என்பதால், அப்பகுதி ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வரும் 5-ம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள னர் என்றார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மாக குன்னூரில் 70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பரமக்குடி, எரணி யல், விளாத்திகுளத்தில் தலா 60 மில்லி மீட்டர், சாத்தூர், சூரன்குடி, திருமங்கலம் (மதுரை மாவட்டம்), வத்திராயிருப்பில் தலா 50 மில்லி மீட்டர், கோத்தகிரி, முதுகுளத்தூர், ஆண்டி பட்டி, கேத்தியில் தலா 40 மில்லி மீட்டர், குளச்சல், கடவூர், உசிலம்பட்டி, சூலகிரி, கமுதியில் தலா 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
குந்தா அணை, செங்கோட்டை, ராசிபுரம், ஏற்காடு, குழித்துறை, வில்லிபுத்தூர், பெரியநாயக்கன் பாளையம், தாத்தையங்கார்பேட்டை, மேட்டுப்பாளையம், குமாரபாளையம், திருச்செந்தூர், சூலூர், கடலாடி, தூத்துக்குடி, பெரியகுளம், விருதுநகர், போடிநாயக்கனூரில் தலா 20 மில்லி மீட்டரும், கோவில்பட்டி, வேடசந்தூர் உட்பட 32 இடங்களில் தலா 10 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.