அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன், “அடுத்து வரும் 24 மணிநேரத்தைப் பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது. அது புயலாக மாறி ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவை நோக்கிச் செல்லும்.
மத்திய வங்கக்கடலில் 10, 11 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். அதேபோல், அரபிக்கடல் பகுதிக்கு வரும் 13-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்” என பாலச்சந்திரன் தெரிவித்தார்.