விஜயதசமியை முன்னிட்டு தாம்பரம்-திருநெல்வேலி, சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே சிறப்பு சுவிதா ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி: விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-திருநெல்வேலி இடையே சிறப்பு சுவிதா ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன்படி தாம்பரம்-திருநெல்வேலி சுவிதா ரயில்(எண்.82617, 82623) அக்.17, 19 ஆம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். திருநெல்வேலி-தாம்பரம் சுவிதா ரயில்(எண்.06016) அக்.18 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து பகல் 2 மணிக்குப் புறப்பட்டு அன்றைய தினம் நள்ளிரவு 3 மணிக்கு தாம்பரம் சென்றடையும். திருநெல்வேலி-சென்னை எழும்பூர் சுவிதா ரயில்(எண்.82602) அக்.21 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு அன்றைய தினம் நள்ளிரவு 3 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றைடயும்.
திருநெல்வேலி-தாம்பரம் சுவிதா ரயில்(எண்.82622) திருநெல்வேலியில் இருந்து நவ.8 ஆம் தேதி மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரம் சென்றடையும். தாம்பரம்-திருநெல்வேலி சுவிதா ரயில்(எண்.06013) தாம்பரத்தில் இருந்து நவ.9 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு அன்றைய தினம் நள்ளிரவு 3.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி ஒன்று, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் 2, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 12, சரக்குப் பெட்டிகள் இரண்டு அடங்கிய இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாகச் செல்லும்.