பல் மருத்துவத் துறை பட்டயப் படிப்பிற்கு நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் தேசிய தகுதித் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தினை நவம்பர் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பல் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் துறைக்கான நீட் 2019 தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்துறையில் பயில விருப்பமும், தகுதியும் உடையோர் வரும் 2018 நவம்பர் 6ம் தேதிக்குள் nbe.edu.in என்னும் தேசிய தகுதித் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தொடர்ந்து டிசம்பர் 14ம் தேதியன்று இதற்கான நுழைவுத் தேர்வு நடைபெறும்.
தேர்வு முறை: கணினி வழித் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்:-
பொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.3750
எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.2750
தேர்வு நேரம்: மூன்று மணி நேரம்
தேர்வுத் தாள்: இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல்.
இத்தேர்வில் மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். அவற்றில் உயிரியல் துறையில் இருந்து 90 கேள்விகளும், இயற்பியல் மற்றும் வேதியியல் துறையில் இருந்து தலா 46 கேள்விகளும் கேட்கப்படும்.