தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 177 இளநிலை உதவியாளர், கணி இயக்குபவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 177
பதவி: இளநிலை உதவியாளர் – 66
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவி: கணி இயக்குபவர் – 111
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், கணினியில் சான்றிதழ் அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரம் எழுத்துக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட இரு பதவிகளுக்கும் மாதம் ரூ.19,500 – 62,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ஆதிதிராவிடர், அருந்ததியர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்களிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை “The Secretary, TNCWWB” என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்த வைகையில் வங்கி வரைவோலையாக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.labour.tn.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: செயலாளர், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், 8,வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034
மேலும் விண்ணப்பம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://govtjobsbest.com/wp-content/uploads/2018/10/TNCWWB-Official-Notification-Application-Form.pdf என்ற வலைத்தள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.11.2018