தமிழகத்தில் உள்ள நகரங்களில், ஓராண்டில் மின் சாதன பழுது, பராமரிப்பு பணி காரணமாக, 45 ஆயிரத்து, 389 மணி நேரம் மின் தடை ஏற்பட்டுள்ளது.மின் இழப்பை கண்டறிய, மின் வினியோக வழித்தடங்களில், மீட்டர் பொருத்தி, தொலைத்தொடர்பு வசதி உதவியுடன், மத்திய அரசு கண்காணிக்கிறது.இதன் வாயிலாக, ஒவ்வொரு வழித்தடத்திலும், எத்தனை முறை, எவ்வளவு நேரம் மின் தடை ஏற்பட்டது போன்ற விபரங்கள் கண்டறியப்படுகின்றன. அதன்படி, 2017 மார்ச், 1ல் இருந்து, 2018 பிப்., 28 வரை, தமிழக நகரங்களில், 87 ஆயிரத்து, 305 முறை மின் தடை ஏற்பட்டு, 45 ஆயிரத்து, 389 மணி நேரம் மின் தடை செய்யப்பட்டு உள்ளது.