அங்கீகாரமில்லா மனைகள் வரன்முறை திட்டத்தை, மேலும், ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
தமிழகத்தில், அங்கீகாரமில்லா மனைகள் வரன்முறை திட்டம், 2017 மே, 4ல் அறிவிக்கப்பட்டது. ஆறு மாதமாக இருந்த அவகாசம், ஓராண்டாக நீட்டிக்கப்பட்டது. பின், மீண்டும், ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது; இந்த அவகாசம் நாளை முடிகிறது. இதனால், மனைகள் வரன்முறை திட்டத்தை, மேலும், ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கலாமா அல்லது தகுதி உள்ள மனைகளை ஒட்டு மொத்தமாக வரன்முறை செய்யலாமா என, வீட்டு வசதித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.இதில், அரசின் ஒப்புதல் கிடைக்காததால், இறுதி முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.